ADDED : ஜூன் 15, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், : கூடலுாரில் பள்ளி மேம்பாட்டு நிதி மூலம் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டிலான 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், லோயர்கேம்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலான 2 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ராஜாங்கம் நினைவு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நகராட்சி தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.