/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திறந்தவெளி பாராக மாறும் அரசு நடுநிலைப் பள்ளி
/
திறந்தவெளி பாராக மாறும் அரசு நடுநிலைப் பள்ளி
ADDED : ஜூன் 01, 2025 12:34 AM
தேனி: வீரபாண்டி அருகே உள்ள வயல்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியை சமூக விரோதிகள் பலரும் திறந்த வெளி டாஸ்மாக் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் அரசுப்பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் நகர்பகுதிகள், அதிகாரிகள் எளிதில் வந்து செல்லும் பள்ளிகளில் மட்டும் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுத்தம் செய்தல், பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
வீரபாண்டியில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் ரோட்டில் வயல்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. கிராமத்தில் இருந்து சுமார் 500 மீ.,க்கு அப்பால் அமைந்துள்ளது. இதனால், இப் பள்ளி வளாகத்தில் யார் வேண்டுமானாலும் எப்போதும் சென்று வரும் அவல நிலை உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தை மதுபாராக மாற்றி உள்ளனர். மேலும் வளாகத்தில் உள்ள குழாய்கள், சுற்றுச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி சுற்றுச்சுவர், குழாய்களை சீரமைக்கவும், தேவையின்றி வளாகத்தில் நுழைவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.