/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் கடந்தாண்டு சுற்றுலா பகுதிகளை 36 லட்சம் பேர் ரசிப்பு மூணாறை பின்னுக்கு தள்ளி வாகமண் முதலிடம்

ADDED : ஜன 26, 2024 06:10 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை கடந்தாண்டு 36 லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்தனர்.
மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகளை மட்டும் 28, 79,571 பேர் ரசித்தனர் என அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
மூணாறில் வனத்துறையினருக்குச் சொந்தமான இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு வரையாடுகளை காண 6.22 லட்சம் பயணிகள் சென்றனர். மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடுக்கி அணையை 1.20 லட்சம் பயணிகள் ரசித்தனர். 'தென்னகத்து காஷ்மீர்' என வர்ணிக்கப்படும் மூணாறை பின்னுக்கு தள்ளி வாகமண்ணில் பயணிகள் அதிகம் குவிந்தனர். அங்கு மாவட்ட சுற்றுலாதுறை பராமரிப்பில் உள்ள மலை குன்றுக்கு மிகவும் கூடுதலாக 8, 82,747 பேரும், அடுத்ததாக அட்வஞ்சர் பூங்காவுக்கு 6, 42,975 பேரும் சென்றனர். வனத்துறை, ஹைடல் டூரிசம் ஆகியோர் அதிகாரபூர்வமாக கணக்குகளை வெளியிட்டால் கடந்தாண்டு மாவட்டத்திற்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை 38 லட்சத்தை கடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனாவுக்கு பிறகு மாவட்டத்தில் சுற்றுலா புத்துயிர் பெற்ற ஆண்டாக கடந்தாண்டு அமைந்தது என மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழக செயலர் ஜிதிஷ்ஜோஸ் தெரிவித்தார். மாவட்டத்தில் கடந்தாண்டு சுற்றுலா பகுதிகளுக்கு வந்து சென்றவர்களின் எண்ணிக்கை: (மாவட்ட சுற்றுலா துறை கணக்கு) மாட்டுபட்டி அணை 1,19,718, ராமக்கல்மேடு 2,71,980, அருவிகுழி 34,027, ஸ்ரீநாராயணபுரம் 2, 49,625, வாகமண் மலை குன்று 8, 82,747, வாகமண் அட்வஞ்சர் பூங்கா 6,42,975, பாஞ்சாலிமேடு 2, 18,077, இடுக்கி ஹில் வியூ பூங்கா 1,16,266, மூணாறு தாவரவியல் பூங்கா 3, 44,129.