/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்பு, வேளாண் மின் இணைப்புகள் தனித்தனியாக பிரிக்கும் பணி துவக்கம்

ADDED : பிப் 06, 2024 12:24 AM
கம்பம் : வேளாண் மற்றும் குடியிருப்புகளுக்கான மின் இணைப்புகளை தனியாக பிரித்து தனி பீடர்கள் அமைக்கும் பணியினை மின்வாரியம் துவக்கி உள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் மின் இணைப்புகள் குடியிருப்பு மற்றும் வேளாண் இணைப்புகள் ஒரே டிரான்ஸ்பார்மர் மூலம் வழங்கப்படுகிறது.
குடியிருப்புகளுக்கு மேம்பட்ட மின் சப்ளை வழங்க மின்வாரியம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஒரு பீடரில் உள்ள வேளாண் மற்றும் குடியிருப்பு இணைப்புகளை தனித் தனியாக பிரித்து தனி டிரான்ஸ்பார்மர்கள் அல்லது தனிபீடர்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு பிரிக்கும் போது குடியிருப்புகளுக்கு மேம்பட்ட மின்சப்ளை கிடைக்கும். கோடை காலங்களில் மின் தடை செய்ய வேண்டி வரும் போது, வேளாண் இணைப்புகளுக்கு சப்ளையை நிறுத்திக் கொள்ளலாம்.
தற்போது ஒரே பீடரில் இருந்தால் குடியிருப்பு பகுதிகளிலும் சப்ளையை நிறுத்த வேண்டியுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் தயாரிக்கப்பட்டது.
செயல்படுத்தும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் அந்த பணிகளை மேற்கொள்ள வாரியம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றனர்.