/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூட்டிய வீட்டில் நகை,பணம் திருட்டு
/
பூட்டிய வீட்டில் நகை,பணம் திருட்டு
ADDED : ஜூன் 11, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் 50, கண்மாய்க்கரை அருகே காளவாசல் தொழில் செய்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் காளவாசல் அருகே உள்ள வீட்டை பூட்டிவிட்டு கன்னியப்பபிள்ளைபட்டி சென்றுவிட்டார். மறுநாள் காலையில் சென்று பார்த்த போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 2000 பணம், அரை பவுன் மதிப்பில் மூன்று மூக்குத்திகள், கண்காணிப்பு கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவை திருடு போயிருந்தது. லட்சுமணன் புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.