/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடுமுறை நாட்களில் அரசு டாக்டர்கள் 'ஆப்சென்ட்' இணை இயக்குனர் ஆய்வு அவசியம்
/
விடுமுறை நாட்களில் அரசு டாக்டர்கள் 'ஆப்சென்ட்' இணை இயக்குனர் ஆய்வு அவசியம்
விடுமுறை நாட்களில் அரசு டாக்டர்கள் 'ஆப்சென்ட்' இணை இயக்குனர் ஆய்வு அவசியம்
விடுமுறை நாட்களில் அரசு டாக்டர்கள் 'ஆப்சென்ட்' இணை இயக்குனர் ஆய்வு அவசியம்
ADDED : ஜூன் 27, 2025 05:19 AM
கம்பம்: 'விடுமுறை நாள் என்றால், கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள்.', என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கம்பம் அரசு மருத்துவமனை பிரசவம் பார்ப்பதில் சிறப்பாக செயல்படுவதால், சீமாங் சென்டர் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலங்களில் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பதில் சுணக்க நிலை காணப்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு என வந்து செல்கின்றனர். காலையில் டாக்டர்கள் பணியில் இருந்து சிகிச்சை அளிக்கின்றனர். அதுவே பிற்பகல், மாலை, இரவு என்றால் டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். நர்சுகள் மட்டும்தான் இருப்பார்கள். அவர்கள் தற்காலிகமாக மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விடுவது தொடர்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அவசர சிகிச்சை என்று வருபவர்களின் நிலை பரிதாபம்தான். இதை விட விடுமுறை நாட்களில் பணியில் டாக்டர்கள் இருப்பது இல்லை. அதிலும் தொடர்ந்து 2 நாட்கள் மற்றும் அதற்கு மேல் விடுமுறை அறிவித்துவிட்டால், அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளியின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும்.
பொங்கல், தீபாவளி போன்ற விடுமுறை நாட்களில் சிகிச்சைக்கு வருபவர்களின் நிலை பரிதாபமாக இருக்கும். டாக்டர்கள் யாருமே இருப்பது இல்லை. மருத்துவ அலுவலராக இருந்த பொன்னரசன் ஓய்வு பெற்று சென்ற பின் நிரந்தர மருத்துவ அலுவலர் நியமனம் இல்லை. பொறுப்பு அலுவலர் உள்ளார். நிரந்தர மருத்துவ அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நலப்பணிகள் இணை இயக்குநர் இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் திடீர் 'விசிட்' செய்தால், கம்பம் அரசு மருத்துவமனையின் அவலத்திற்கு தீர்வு கிடைக்கும்.