ADDED : ஜூன் 06, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் சட்டசபை தொகுதிகள் வாரியாக மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தின் கீழ் கம்பம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோம்பை பகுதியில் மினி ஸ்டேடியம் அமைகிறது.
இந்த ஸ்டேடியம் அமைப்பதற்காக 4.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.3கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் தடகளம், கூடைப்பந்து, கபடி மைதானங்கள் அமைகிறது என விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.