/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுகாதார நிலையங்களில் ஆய்வுக்கு தேசிய தரச் சான்று குழு வருகை
/
சுகாதார நிலையங்களில் ஆய்வுக்கு தேசிய தரச் சான்று குழு வருகை
சுகாதார நிலையங்களில் ஆய்வுக்கு தேசிய தரச் சான்று குழு வருகை
சுகாதார நிலையங்களில் ஆய்வுக்கு தேசிய தரச் சான்று குழு வருகை
ADDED : ஜூன் 25, 2025 07:58 AM
சின்னமனூர் சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் துணை சுகாதார நிலையங்களில் தேசிய தரச்சான்று குழுவினர் ஜூலை முதல் வாரம் ஆய்வு செய்ய வருகின்றனர்.
மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை அரசு பலப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை,டாக்டர்கள் எண்ணிக்கை, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் தரச்சான்றுகளையும், நிதி உதவியும் வழங்குகிறது.
மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம் மருத்துவமனைகள், கூடலூர், ஓடைப்பட்டி உள்ளிட்ட பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச் சான்று பெற்றுள்ளன.
தற்போது சின்னமனூர் வட்டாரத்தில் சீப்பாலக்கோட்டை , காமாட்சிபுரம், முத்துலாபுரம், பொட்டிபுரம், சங்கராபுரம் துணை சுகாதார நிலையங்கள் மாநில அளவில் தேர்வு பெற்று தேசிய தரச்சான்றுக்கு விண்ணப்பித்துள்ளன.
ஜூலை முதல் வாரத்தில் சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் துணை சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ய தேசிய தரச்சான்று குழுவினர் வருகை தர உள்ளனர்.
இந்த ஆய்வில் துணை சுகாதார நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டால், ஆண்டிற்கு ரூ.1.50 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை மத்திய அரசு வழங்கும். இந்த தொகையை பயன்படுத்தி துணை சுகாதார நிலையத்திற்கு தேவைப்படும் மருந்து மாத்திரைகள் , உபகரணங்கள் வாங்கிடலாம் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.