/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி; போடி மாணவர்கள் சாதனை
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி; போடி மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 02, 2024 12:15 AM

போடி : தேசிய அளவில் கோவையில் நடந்த 'ஸ்கேட்டிங்' போட்டியில் இரண்டாம் இடம் பெற்று போடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கோவையில் 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா மாநிலங்களில் இருந்து 3500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெனியுனியா 1000 மீ., போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெண்கலமும், 300 மீ., போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளியும், 200 மீ., போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலமும் பெற்றார்.
ஆண்களுக்கான பிரிவில் தேனி சாந்தி நிகேதன் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் அரிதர்ஷன் 3000 மீ., 400 மீ., போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளியும், 1000 மீ., போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலமும் பெற்றார்.
வெற்றி பெற்ற இருவரும் இன்டர் நேசனல் அளவில் நடக்கும் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை போடி ஸ்ரீ ஷகஸ்ரா மல்டி ஸ்போர்ட்ஸ் அகடாமியின் மாஸ்டர் மணிகண்டன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

