/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூலிகை நர்சரி அமைப்பதில் ஆர்வம் காட்டாத ஊராட்சிகள்
/
மூலிகை நர்சரி அமைப்பதில் ஆர்வம் காட்டாத ஊராட்சிகள்
மூலிகை நர்சரி அமைப்பதில் ஆர்வம் காட்டாத ஊராட்சிகள்
மூலிகை நர்சரி அமைப்பதில் ஆர்வம் காட்டாத ஊராட்சிகள்
ADDED : ஜன 10, 2024 12:21 AM
சின்னமனுார் : அனைத்து ஊராட்சிகளிலும் மூலிகை நர்சரி அமைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை பல ஊராட்சிகள் முறையாக செயல்படுத்தாமல் முடங்கியுள்ளது.
மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதில் அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகளை வளர்க்க நர்சரிகள் அமைக்க உத்தரவிட்டது. இதற்கு பெரும்பாலான ஊராட்சிகளில் இடம் இல்லை என்று கூறி நர்சரி அமைப்பதை தவிர்த்துள்ளனர். மாவட்டத்திலும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ஒரு சில ஊராட்சிகளில் நர்சரிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரக வளர்ச்சி துறை மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதில் அனைத்து ஊராட்சிகளும் கண்டிப்பாக நர்சரி ஏற்படுத்தவும் அதில் மரக்கன்றுகள், மூலிகை செடிகளும் வளர்க்க வேண்டும். இவற்றை பொதுமக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ வீடுகளில் மூலிகை செடிகள் வழங்கி, வளர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளது.
மேலும் மூலிகைகளின் பயன்பாடுகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கவும், நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களை நர்சரி பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.
கிடைக்கும் இடங்களில் ஊராட்சிகளே மரக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் ஊராட்சிகளில் நர்சரி அமைப்பது, மூலிகை செடிகள் வளர்ப்பதை ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஊராட்சியிலும் இத் திட்டத்தை செயல்படுத்தி மூலிகை செடிகள் வளர்த்து பொதுமக்களுக்கு வழங்கும் அரசின் உத்தரவை செயல்படுத்த வேண்டும்.

