ADDED : ஜன 10, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே சிலமலை முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் புஷ்பம் 40. மகள் சந்தியா 18. புஷ்பத்தின் தம்பி மாற்றுத் திறனாளி முருகேசன் 36. சிலமலையில் 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சுண்ணாம்பு காரை வீடு இடிந்து விழுந்தது. கீழ் வீட்டில் படித்து கொண்டிருந்த சந்தியா மீது சுவர் விழுந்ததில் சம்பவ இடத்திலே இறந்தார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். வீடு கட்டுவதற்கான உதவி செய்வதாக கூறினார். உடன் ஓ.பி.எஸ்., அணி போடி நகர செயலாளர் பழனிராஜ், நகர் கழக அவைத்தலைவர் மணிகண்டன் உட்பட கலந்து கொண்டனர்.

