ADDED : ஜூன் 11, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் இலவச மருத்துவகாப்பீடு, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட இணை அமைப்பாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் ரவிக்குமார் , நிர்வாகிகள் வசந்தா, ஜோதிமணி, லட்சுமி, பெருமாள்சாமி, முருகேசன், ஜானகி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.