/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காபி குடிப்பது போல் தினமும் கபசுர குடிநீர் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்திய மக்கள்
/
காபி குடிப்பது போல் தினமும் கபசுர குடிநீர் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்திய மக்கள்
காபி குடிப்பது போல் தினமும் கபசுர குடிநீர் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்திய மக்கள்
காபி குடிப்பது போல் தினமும் கபசுர குடிநீர் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்திய மக்கள்
ADDED : பிப் 06, 2024 12:27 AM

கம்பம் : காலையில் காபி குடிப்பது போன்று, பொதுமக்கள் கபசுர குடிநீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டனர். காமயகவுண்டன்பட்டி சித்தா பிரிவு தினசரி கபசுர குடிநீர் காய்ச்சுவதை வழக்கமாக்கி உள்ளனர்.
2019ல் கொரோனா பெருந் தொற்று ஆரம்பமானது. 2021 வரை தீவிரமானது. அப்போது மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதனை குடிப்போருக்கு சளியையும் சரி செய்து, தொண்டை கரகரப்பை சரி செய்ய கபசுர குடிநீர் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமந்தோறும் கபசுர குடிநீர் முகாம்கள் நடத்தப்பட்டது.
வீடுதோறும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.
இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.
அப்போதிருந்தே காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலவேம்பு, கபசுர குடிநீர் காய்ச்சி வினியோகம் செய்வதை வழக்கமாக்கினர். தினமும் மூன்று முறை காய்ச்சி வடிகட்டி பாத்திரத்தில் வெளியில் வைத்து விடுவார்கள்.
காமயகவுண்டன்பட்டி, சுருளிப் பட்டி, அண்ணாபுரம், அணைப் பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் காலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து, சித்தா பிரிவில் வைக்கப்பட்டுள்ள கபசுர குடிநீரை ஒரு டம்ளர் அருந்தி விட்டு செல்கின்றனர். காபி குடிப்பது போன்று கிராம மக்கள் பலரும் கபசுர குடிநீர் குடித்து வருகின்றனர்.
இது குறித்து சித்தா டாக்டர் சிராசுதீன் கூறுகையில், தினமும் கபசுர குடிநீர் காய்ச்சி கசாயம் வழங்குகின்றோம். இதை குடிப்பதால் மக்களுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்றார்.