/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
98 மையங்களில் நாளை பிளஸ் 2 செய்முறைத்தேர்வு
/
98 மையங்களில் நாளை பிளஸ் 2 செய்முறைத்தேர்வு
ADDED : பிப் 11, 2024 01:44 AM
தேனி: தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 98 மையங்களில் நாளை (பிப்.12ல்) செய்முறைத் தேர்வு துவங்குகிறது.
மாவட்டத்தில் அரசு 70, உதவி பெறும் 15, பகுதி உதவி பெறும் 12, தனியார் 59 என 156 மேல் நிலைப் பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் 6549 மாணவர்கள், 6993 மாணவிகள் என 13,542 பேர் படிக்கின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நாளை துவங்குகிறது. செய்முறைத் தேர்வு மாவட்டத்தில் உள்ள 98 மையங்களில் நடக்கிறது.
செய்முறைத்தேர்விற்கு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், வேறொரு பள்ளியில் இருந்து மற்றொரு ஆசிரியர் என இரு ஆசிரியர்கள் பங்கேற்பர். செய்முறைத்தேர்வு அட்டவணை பள்ளிகளுக்கு இடையே மாறுபடுகிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப்., 19, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.,23ல் செய்முறைத்தேர்வு துவங்குகிறது.

