ADDED : மே 28, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் அம்பேத்கர் தெற்கு தெரு முத்துப்பாண்டி 30, மின்வாரிய தற்காலிக பணியாளர். இவரது மனைவி ஆனந்தி 30, கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் ஆனந்தி தலையில் காயமடைந்தார். உறவினர்கள் அல்லிநகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி ஆளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.