/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரச்னை ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்: ஜி.கல்லுபட்டியில் பொதுமக்கள் மறியல்
/
பிரச்னை ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்: ஜி.கல்லுபட்டியில் பொதுமக்கள் மறியல்
பிரச்னை ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்: ஜி.கல்லுபட்டியில் பொதுமக்கள் மறியல்
பிரச்னை ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்: ஜி.கல்லுபட்டியில் பொதுமக்கள் மறியல்
ADDED : ஜன 17, 2024 01:05 AM

தேவதானப்பட்டி : ஜி.கல்லுப்பட்டியில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் ரிஷாத்ராஜ் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் 2 மணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் 65. இவர் வீட்டின் முன்பு ஜன.13ல், சிலர் சத்தம் போட்டு சண்டை போட்டு கொண்டிருந்தனர்.
இதனை சந்திரசேகர் ஏன் இப்படி சண்டை போடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதற்கு அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மகன் ரிஷாத்ராஜ் 24. சந்திரசேகரை அவதூறாக பேசி கையில் அணிந்திருந்த காப்பினால் கண்ணில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.
சந்திரசேகர் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரிஷாத்ராஜை நேற்று முன்தினம் தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்கள் ரோடு மறியல்:
ஜி. கல்லுப்பட்டியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வரும் ரிஷாத்ராஜ் மீது போலீசார் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரிஷாத்ராஜ் குடியிருப்பு பகுதியில் அவதூறாக பேசியும், யாராவது கேட்டால் 'பி.சி.ஆர்' வழக்கு போடுவேன் என மிரட்டுகிறார்.
ஜி.கல்லுப்பட்டி சுடுகாடு பகுதி, அரசமரத்து தெரு, முத்தாலம்மன் கோயில் தெரு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா, மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் ஊரில் பல்வேறு பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை ஒழிக்கவேண்டும் என கோரி ஜி.கல்லுப்பட்டி பேட்டை பகுதி மக்கள் உட்பட பொது மக்கள், ஜி.கல்லுப்பட்டி- வத்தலகுண்டு ரோட்டில் 2 மணி நேரம் ரோடு மறியல் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., கருணாகரன் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் ரோடு மறியல் கைவிடப்பட்டது.

