/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: டி.எஸ்.பி.,
/
ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: டி.எஸ்.பி.,
ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: டி.எஸ்.பி.,
ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: டி.எஸ்.பி.,
ADDED : செப் 29, 2025 06:06 AM
தேனி : தேனி நகர் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு ஸ்டிக்கர் ஒட்ட உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் முத்துக்குமார் பேசினார்.
தேனியில் தனியார் மகாலில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடந்தினர். டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆட்டோ டிரைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அதிக சத்தம் எழுப்ப கூடிய ஹாரன், ஒலி பெருக்கிகளை ஆட்டோவில் பயன்படுத்தக்கூடாது. பயணிகளிடம் கனிவாக நடக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியூ.ஆர்., கோடு முறை தேனியில் பின்பற்ற உள்ளோம்.
அந்த கியூ.ஆர்., கோடுவில் ஆட்டோ பற்றிய தகவல்கள், உரிமையாளர், டிரைவர் பற்றிய தகவல்கள், அலைபேசி எண்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளோம்., என்றார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜூ முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை எஸ்.ஐ.,க்கள் கருப்பசாமி, உதயசூரியன் செய்திருந்தனர்.