ADDED : பிப் 02, 2024 12:10 AM

கம்பம் : பள்ளி கல்வித் துறை சார்பில் குடியரசு தினம், பாரதியார் தினத்தையொட்டி மாநில ஜூடோ போட்டிகளில் தேனி மாவட்ட பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெரம்பலூரில் மாநில ஜூடோ போட்டிகள் நடந்தது. இதில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுருதி, இத்திகா ரோஷிணி , கம்பம் சிபியூ மேல்நிலைப்பள்ளி மணிகண்டன், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி நித்தீஸ்வரன், முத்து தேவன்பட்டி மேலப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி ரோகித் ஆகியோர் தங்க பதக்கங்களை பெற்றனர்.
உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கிருத்திகாஸ்ரீ, ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நேபிகா பரணி , சுபா, சஞ்சனா, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அப்துல் பாசில் , முத்து தேவன்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி சுதர்ஷன் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி தேவதர்ஷினி, முத்தையன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி சதீஷ், முத்துதேவன்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி ராமதிலகம் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர்.
பதக்கங்கள் பெற்று சாதனை மாணவ மாணவிகளை தேனி மாவட்ட ஜூடோ சங்க தலைவர் ரவி, செயலாளர் நந்தினி, பொருளாளர் செல்லப் பாண்டியன், தலைமை பயிற்சியாளர் முரளி , துணை பயிற்சியாளர்கள் மாதவன், பாலா, பரத்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

