/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்; பயனாளிகளுக்கு ரூ.3.92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்; பயனாளிகளுக்கு ரூ.3.92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்; பயனாளிகளுக்கு ரூ.3.92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்; பயனாளிகளுக்கு ரூ.3.92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 27, 2024 04:46 AM

தேனி மாவட்டத்தில் 75வது குடியரசு தினவிழாவை யொட்டி நேற்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லுாரிகளில் நடந்த கலை நிகழ்சிகளில் மாணவர்கள், மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.
தேனி தினமலர் நாளிதழ் கிளை அலுவலகத்தில் தேசிய கொடி காலை 8:00 மணிக்கு ஏற்றப்பட்டது. ஊழியர்கள் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டன. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ஷஜீவனா தேசிய கொடியை ஏற்றி வைத்து, எஸ்.பி., சிவபிரசாத்துடன் இணைந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். பின் மூவர்ண பலுான்கள் பறக்கவிட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பததினருக்கு மரியாதை செய்தார்.
67 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம்
மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 67 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அணிவித்து பாராட்டினார். பின் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஒருங்கிணைகிணைந்த பிரதம மந்திரியின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக சேவைபுரிந்த தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 அலுவலர்கள், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 17 ஆசிரியர்களுக்கும், படைவீரர் கொடி நாள் 2021 அதிக நிதி ரூ.5.85 லட்சம் வசூல் செய்தமைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமாருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கியும், சிறப்பாக பணிபரிந்து 90 அரசு அலுவலர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பின் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளை சார்ந்த 230 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பை சேர்ந்த மாணவ மாணவிகள் என 650 பேர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ப்ரீதா, துணைத் தலைவர் ராஜபாண்டியன், தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, திட்ட இயக்குனர் அபிதாஹனிப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆர்.டி.ஓ.,க்கள் பால்பாண்டி, முத்துமாதவன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சிவபிரசாத் கொடி ஏற்றினார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தன், சுகுமாறன், டி.எஸ்.பி., க்கள் ஞானரவி தங்கத்துரை, கருணாகரன், ராமலிங்கம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ.,கள் திவான்மைதீன், மணிகண்டன், அலுவலக கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லுாரிகள்
தேனி கோடாங்கிபட்டி பூர்ண வித்யா பவன் பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் சுரேஷ் மெட்ரிக் பள்ளியிலும், முதல்வர் ஹேமாராணிகண்ணகி சி.பி.எஸ்.இ., பள்ளியிலும் கொடி ஏற்றி பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி தலைவர் முத்துக்கோவிந்தன், இயக்குனர்கள் ரேணுகாதேவி, ஷியாம், விவேதா, அரவிந்தன், குமார், ஹர்சவர்தன், முருளிதரன், சரண், தொழிலதிபர் தாமோதரன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் நடந்த விழாவில், செயற்குழு உறுப்பினர் ராமசாமி கொடி ஏற்றினார். தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி, இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். இளங்கலை பயிற்சி அலுவலர் அழகுமலை நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை உதவி பயிற்சி அலுவலர் அவினாஷ் செய்திருந்தார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளிச் செயலர் சண்முகநாதன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். மாணவிகள் பங்கேற்ற ஓவியம், ரங்கோலி, அடுப்பில்லா சமையல் போட்டிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் பராசக்தி, சத்தியபிரபா தொகுத்து வழங்கினர். பட்டதாரி ஆசிரியர் சரவணன் நன்றி தெரிவித்தார்.
தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் பரந்தாமன் கொடி ஏற்றினார். பள்ளி கல்விச் சங்க செயலாளர் பாக்யகுமாரி முன்னிலை வகித்தார். முதல்வர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் வினோத்குமார், கார்த்திகேயன், ஆசிரியைகள் சசிகலா, ஷாலினி, வாணிஸ்ரீ, சித்ரா, ஹேமலதா ஆகயோர் பங்கேற்றனர். ஆசிரியை வாணிஸ்ரீ நன்றி தெரிவித்தார்.
தேனி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஜவஹர் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் பாண்டிக்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி, ஆசிரியை ஜமுனாராணி மாணவர்கள் தேச தலைவர்கள் பற்றி பேசினர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை விஜயா, சரசு நிகழ்வை தொகுத்து வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர்கள் மகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.
முத்துத்தேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளிச் செயலாளர் பாலசரவணக்குமார் தலைமை வகித்தார்.விளையாட்டுத்துறைச் செயலாளர் ராமச்சந்திரன் கொடி ஏற்றினார். இணைச் செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார் பேசினார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். கலை நிகழ்சசிகள் நடந்தன. அலுவலர் ஜெகநாதன் நன்றி தெரிவித்தார்.
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் நிர்வாகக்குழு உறுப்பினர் நவநீதன் கொடி ஏற்றினார். சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி, துணைத் தலைவர் பாண்டியராஜ், பொதுச் செயலாளர் மகேஷ், பொருளாளர் ரெங்கராஜ், கல்லுாரி செயலர் தாமோதரன், கல்லுாரி பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கணினி காணொலி அறைகள் சங்கத் தலைவர், துணைத் தலைவர் துவக்கி வைத்தனர். சங்க உறுப்பினர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பிற பணியாளர்கள் பங்கேற்றனர்.
தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி கொடி ஏற்றினார். முதல்வர் மீனாகுமாரி வரவேற்றார். துணைத் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் மகேஸ், பொருளாளர் ரெங்கராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜமன்னார், பள்ளிச் செயலாளர் ஸ்ரீநீவாசன், இணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் உறவின்முறை துணைத் தலைவர் கணேஷ் கொடி ஏற்றினார். முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச் செயலாளர் நவீன்ராம் வாழ்த்தினர். உறவின்முறை தலைவர் ராஜமோகன் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உறவின்முறை பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை துணை முதல்வர் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குனர்கள் சுந்தர்ராஜன், செல்வகுமார், மாலினி, பேராசிரியர்கள், கணிப்பொறி அறிவியல் துறையின் பிஸ்ட் மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மாணவி சவுந்தர்யலட்சுமி நன்றி தெரிவித்தார்.
தேனி கம்மவார் சங்கம் கல்வியியல் கல்லுாரி விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி கொடி ஏற்றினார். கல்லுாரிச் செயலாளர் சதிஸ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி பொருளாளர் லெட்சுமணகோபால் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை முதல்வர் கார்த்திகேயன் செய்திருந்தார்.
வடபுதுப்பட்டி முத்தாலம்மன் இந்து துவக்க, மேல்நிலைப் பள்ளிகளில் சமூக ஆர்வலர் ரமணன் கொடி ஏற்றி பேசினார். வடபுதுப்பட்டி நாயுடு நலச்சங்கம் தலைவர் ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசு வரவேற்றார். கல்வி புரவலர் கோவிந்தராஜ், பள்ளி தலைவர் முருகன், செயலர் ராஜேஸ்வரன், கொடையாளர் வீருமுத்துநாயக்கர் ஆகியோர் பேசினர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் நன்றி தெரிவித்தார்.
தேனி நாடார் சரஸ்வதி கலை கல்லுாரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். பண்டக சாலை செயலாளர் விஜயகுமார் கொடி ஏற்றினார். பின் 2500 மாணவிகள் ஒருங்கிணைந்து நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக, 8 தலைப்புகளில் வழங்கிய விழிப்புணர்வு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், துணை முதல்வர்கள் கோமதி, சரண்யா, ஆய்வாளர் கிருஷணவேனி பேசினர். கலை நிகழ்சசிகள் நடந்தன. துணை முதல்வர் சுசீலாசங்கர் நன்றி தெரிவித்தார்
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகததில் முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி கொடி ஏற்றி பேசினார். பிற நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றங்களின் பணியாளர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தேனி பெரியகுளம் ரோடு நகர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடந்த விழாவில் உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி கொடி ஏற்றினார். போக்குவரத்து பிரிவு நிலைய அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பிற முதல்நிலை தீயணைப்புத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூடலூர்: நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் காஞ்சனா தலைமையில், தலைவர் பத்மாவதி கொடியேற்றினார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவுன்சிலர் லோகந்துரை, மேலாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் கொடியேற்றினார். தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராஜாங்கம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் டேனியல் கொடியேற்றினார். திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் மூர்த்திராஜன் தலைமையில், தலைமை ஆசிரியை பிரபாவதி கொடியேற்றினார்.
வடக்கு, தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் கொடியேற்றினார். ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
என்.எஸ்.கே.பி. காமாட்சியம்மாள் துவக்கப்பள்ளியில் தாளாளர் பொன்குமரன் கொடியேற்றினார். வ.உ.சி. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண் பிரசன்னா கொடியேற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஹிந்து முன்னணி சார்பில் நகர பொதுச்செயலாளர் ஜெகன் கொடியேற்றினார். மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் சகிலா கொடியேற்றினார். ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளியில் முதல்வர் பாலகார்த்திகா கொடியேற்றினார். இந்து ஆரம்பப் பள்ளியில் தாளாளர் முத்துக்குமரன் முன்னிலையில், தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கொடியேற்றினார்.
முகைதீன் ஆண்டகை பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் கொடியேற்றினார். எஸ்.டி.பி.ஐ., கட்சி நகர துணைத் தலைவர் சபீர்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கவிதா கொடியேற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். லோயர்கேம்ப் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் கொடியேற்றினார்.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் செயலாளர் ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் வசந்தன், முதல்வர் ரேணுகா முன்னிலையில், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி கொடியேற்றினார்.
ஆண்டிபட்டி: லிட்டில் பிளவர் பள்ளி குடியரசு தின விழாவில் பள்ளி ஆலோசகர் தமயந்தி கொடியேற்றினார். தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலை வகித்தார். முதல்வர் உமா மகேஸ்வரி பள்ளி செயலாளர் மாத்யூஜோயல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளியில் கல்விக்குழுமத் தலைவர் வச்சிரவேல் முன்னிலையில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கொடியேற்றினார். எஸ்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சாந்தி, எஸ்.கே.ஏ.,கல்வியியல் கல்லூரியில் துணை முதல்வர் தங்கவேல் ொடியேற்றினர். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்தியாஸ்ரம் சி.பி.எஸ்.சி.,பள்ளியில் ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் முத்து இருளப்பன் கொடியேற்றினார். தாளாளர் கயல்விழி, முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஹரிதாஸ் தலைமையில் தலைமை ஆசிரியர் செந்தில் கொடியேற்றினார். ஊராட்சி தலைவர் வீரழகம்மாள் முன்னிலை வகித்தார். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் முதல்வர் பாலசங்கர் கொடியேற்றினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், நிலைய மருத்துவ அலுவலர் சந்திரா, துணை முதல்வர் தேன்மொழி உதவி நிலைய மருத்துவ அலுவலர் மணிமொழி மற்றும் துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் கொடி ஏற்றினார்
பெரியகுளம்: தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் முன்பு 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றினார். அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்
சையதுகான், அமைப்பு செயலாளர் மஞ்சுளா, நகர செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பெரியகுளத்தில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் விதவையர் நலச்சங்கம் சார்பில் முன்னாள் கேப்டன் தனபால் தேசியக்கொடியேற்றினார். ராணுவ சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் மரியபொன்னுச்சாமி, பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜாராம், முன்னாள் ராணுவ வீரர்கள் காமராஜ் பாண்டியன், முத்துகாமு, ரத்தினம், முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கணேசன் தேசியக்கொடி ஏற்றினார். நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி கமலநாதன், வழக்கறிஞர் சங்க தலைவர் பாலாஜி, செயலாளர் நாராயணசாமி இணைச் செயலாளர் மதன், பொருளாளர் முத்தமிழரசன் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். பெரியகுளம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் கொடியேற்றினார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் குமார் கொடியேற்றினார். நிலைய மருத்துவ அலுவலர்கள் ராஜேஷ் மகேஸ்வரி, செவிலியர் கண்காணிப்பாளர் வெங்கலட்சுமி பங்கேற்றனர். பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோபிநாத் கொடியேற்றினார்.
கவுன்சிலர் சந்தானலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி பங்கேற்றனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை முனிரத்தினம் கொடியேற்றினார். கவுன்சிலர் முகமது அலி, ஆசிரியைகள் பங்கேற்றனர். வடுகபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சின்னராஜா, ஆசிரியர்கள் பங்கேற்றனர். தென்கரை நூலகத்தில் பேராசிரியை பத்மினிபாலா கொடியேற்றினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் அன்புக்கரசன், மணி கார்த்திக், முருகன், நூலகர்கள் சவடமுத்து, முருகன், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் நூலகத்தில், நூலக
வளர்ச்சிக்குழு தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் நடேசன் கொடியேற்றினார். நூலகர்கள் விஜயமூர்த்தி, திருமூர்த்தி, வாசகர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் நகராட்சியில் தலைவர் சுமிதா கொடியேற்றினார். கமிஷனர் மீனா, மேலாளர் கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் தங்கவேல் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் ஜெகதீஷ் சுபாஷ்சந்திரபோஸ், சேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். வடுகபட்டி பேரூராட்சியில் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். தூய்மைப்பணி டிராக்டர் டிரைவர் பாலமுருகன் கொடியேற்றினார். துணைத் தலைவர் அழகர், கவுன்சிலர்கள் வசந்த் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். தாமரைக்குளம் பேரூராட்சியில் தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். செயல்அலுவலர் ஆளவந்தார் கொடியேற்றினார். துணைத் தலைவர் மலர்விழி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தென்கரை பேரூராட்சியில் தலைவர் நாகராஜ் கொடியேற்றினார். துணைத் தலைவர் ராதா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
டி.வாடிப்பட்டி ஊராட்சியில் தலைவர் தங்கராஜ் கொடியேற்றினார். துணைத் தலைவர் இந்திராணி, பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் சம்சுல்குதா கொடியேற்றினார். துணைத் தலைவர் நபிஷாபீவி. முதலக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் பிரபா கொடியேற்றினார். துணைத் தலைவர் முருகேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
அழகர்நாயக்கன் ஊராட்சியில் தலைவர் கோட்டையம்மாள் கொடியேற்றினார். துணைத் தலைவர் சோனியா, ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
போடி: முன்னாள் ராணுவத்தினர் சங்க அலுவலகத்தில் தலைவர் கணேசன் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. செயலாளர் ஏ.முருகன், துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் கொடியேற்றினார். போடி சி.பி.ஏ., கல்லூரியில் கொடியேற்று விழா தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். என்.சி.சி., திட்ட அலுவலர் சிவா வரவேற்றார். என்.சி.சி., மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை உடன் பேராசிரியர்கள் மகேஸ்வரன், முனியாண்டி, குமாரராஜன் கொடி ஏற்றினர். நிர்வாக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்து கொடியேற்றினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழ்மாறன், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் குபேரராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போடி வட்டார ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் தலைவர் காந்தி தலைமை வகித்து கொடியேற்றினார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் தேவகவுடா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பரமசிவம், இணைச் செயலாளர்கள் ராஜரத்தினம், சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்று விழா தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் ஆனந்த் சீனிவாசன் கொடி ஏற்றினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் தம்பிதுரை, அழகுகுமார், காளிமுத்து, பழனியாண்டி உட்பட பல பங்கேற்றனர்.
போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் வாசு தலைமை வகித்து கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் அலர்மேலு தேவசேனா முன்னிலை வகித்தார். ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி அன்னை இந்திரா நினைவு ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியர் சிவனேஸ்வர மணிச்செல்வன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். ஆசிரியர்கள் முத்து கார்த்திகா, உமா, குழந்தைகள் நல அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தனர். அண்டு பிரைமரி பள்ளியில் செயலாளர் லட்சுமி வாசன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ராஜலட்சுமி தலைமை வகித்து கொடியேற்றினார். நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, பொறியாளர் குணசேகரன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்று விழா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வடமலைமுத்து தலைமை வகித்தார். தலைமையாசிரியர் அமுதா கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர்கள் அக்சயா, கனக பாண்டியம்மாள், தி கிரீன் லைப் பவுண்டேஷன் செயலாளர் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி ஜி.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்று விழா தாளாளர் சுருளிவேல் தலைமையில் நடந்தது. செயலாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். தவமணி கணேசன் அறக்கட்டளை அறங்காவலர் காளியம்மாள் கொடி ஏற்றினார்.
போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பிரிதிவிராஜன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி டவுன் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, தாலுகா ஸ்டேஷனில் எஸ்.ஐ., இதிரிஸ்கான், அனைத்து மகளிர் ஸ்டேசனில் எஸ்.ஐ., கிருஷ்ணவேணி தலைமை வகித்து கொடியேற்றினர்.
காமராஜபுரம் ஊராட்சியில் தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்து கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சுமதி, செயலாளர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கம்பம்
நகராட்சியில் கமிஷனர் வாசுவேன் கொடி ஏற்றினார். தலைவர் வனிதா, பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், துப்புரவு அலுவலர் அரசகுமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., செண்பகவள்ளி கொடியேற்றினார். தலைவர் பழனி மணி உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தெற்கு போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் லாவண்யா, வடக்கு போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடி ஏற்றினார்கள்.
நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் தாளாளர் விஸ்வநாதன் ஏற்றினார். முதல்வர் மோகன், ஒருங்கிணைப்பாளர் மலர்விழி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் காந்த வாசன் கொடியை ஏற்றினார். இணை செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அச்சுத நாகசுந்தர் கொடி ஏற்றினார். முதல்வர் கருப்பசாமி, ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர்.
ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைவர் சவுந்திரராசன் கொடியை ஏற்றினார். தாளாளர் கவிதா, முதல்வர் சுவாதிகா உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர்.
ஆர்.ஆர், இன்டர்நேசனல் பள்ளியில் தலைவர் ஆர்.ராசாங்கம் கொடி ஏற்றினார். துணை தலைவர் அசோக் குமார், பொருளாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி துவக்க பள்ளியில் கொடியை தலைமையாசிரியை பரமேஸ்வரி ஏற்றினார். மேலாண்மை குழு தலைவர் பிரித்தா, கவுன்சிலர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உத்தமபாளையம் : ஆர்.டி.ஒ. அலுவலத்தில் ஆர்.டி.ஒ. பால்பாண்டியன் கொடி ஏற்றினார். உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகரன் கொடி ஏற்றினார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி கொடி ஏற்றினார். ஒன்றிய தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கருத்தராவுத்தர் கல்லூரியில் கொடியை நிர்வாக குழு தலைவர் முகமது மீரான் ஏற்றினார். தாளாளர் தர்வேஷ் முகைதீன், முதல்வர் எச். முகமது மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விகாசா மெட்ரிக் மேல்நிலையில் தலைவர் இந்திரா கொடி ஏற்றினார். செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், ஆவிலா தெரசா, பலர் பங்கேற்றனர்.
சின்னமனுார் : சின்னமனுார் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கோபிநாத் கொடி ஏற்றினார். தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் முத்துகுமார், பில்டிங் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரத மணி கொடி ஏற்றினார். தலைவர் நிவேதா உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

