/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரூராட்சியாக தரம் உயர்த்த கிராம சபையில் தீர்மானம்
/
பேரூராட்சியாக தரம் உயர்த்த கிராம சபையில் தீர்மானம்
பேரூராட்சியாக தரம் உயர்த்த கிராம சபையில் தீர்மானம்
பேரூராட்சியாக தரம் உயர்த்த கிராம சபையில் தீர்மானம்
ADDED : ஜன 27, 2024 04:50 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து ஊராட்சி தலைவர் வேல்மணி கூறியதாவது: இந்த ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஊராட்சியில் விரிவாக்க பகுதிகள் அதிகம் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஊராட்சியில் உள்ள சீதாராம்தாஸ் நகர், ஜெ.ஜெ.,நகர், சில்க்வார்பட்டி, சேடப்பட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம், ராஜகோபாலன்பட்டி உட்பட பல இடங்களில் 2200 மீட்டர் அளவில் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 புதிய தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 100 புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது.
பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அடிப்படை தகுதிகள் இந்த ஊராட்சிக்கு உள்ளது. இது குறித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஆகியோர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.

