/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் பொய்த்து போனதால் ஓய்வு பெற்றவர்கள் பாதிப்பு' ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சாடல்

ADDED : ஜன 09, 2024 11:16 PM
தேனி,:''சட்டசபை தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் பொய்த்துப் போனதால், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள், குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் எங்களது எதிர்ப்பை பதிவு செய்வோம்,'' என, தேனியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற 96 ஆயிரம் பேர் உள்ளனர். ஓய்வூதியம் பெறும் வாரிசுதாரர்கள் 20 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 2015க்கு பின் ஓய்வூதியம் பெற்று வந்த 6000 பேர் இறந்து விட்டனர். எட்டாண்டுகளாக எங்களுக்கான சலுகைகளை பெற வேண்டி போராடி வருகிறோம்.
தி.மு.க., தலைவரான தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது, ''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படியை உயர்த்துவோம். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவோம். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் இதனை நிறைவேற்றுவோம்,'' என, வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 32 மாதங்கள் முடிந்த பின்பும் இன்னும் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கோரி வழக்கு தொடர்ந்தோம். அதில் உயர்த்தி வழங்க உயர்நீதிமன்றம் 2022 நவம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால் அந்த உத்தரவையும் தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் நபருக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயர்த்தி வழங்கினால் ரூ.17 ஆயிரம் பெறுவார். இதனை வைத்து தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குடும்பத்தை சமாளிக்கலாம்.