/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பஸ் ஸ்டாண்டில் விபத்து அபாயம்
/
தேனி பஸ் ஸ்டாண்டில் விபத்து அபாயம்
ADDED : ஜன 26, 2024 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் மொபசல் பஸ்கள் உள்ளே செல்லும் பகுதியில் உருவான பள்ளத்தில் பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பஸ்களும்,பயணிகளும் சிரம் அடைகின்றனர்.
இந்த பஸ் ஸ்டாண்டிற்குள் தினமும் 620 பஸ்கள் வந்து செல்கின்றன. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நுழைவு பகுதியில்தான் உள் நுழைகிறது. பெரும் பள்ளம் உருவாகி உள்ளதால் பயணிகள் பாதிக்கின்றனர். நடைபாதை, ரோடுகளில் சிறு,சிறு பள்ளங்கள் அதிகம் உள்ளன. பேட்ச் ஒர்க் மூலம் சீரமைக்க பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

