/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர்்க்கடன் செலுத்த இருந்த ரூ.46 ஆயிரம் திருட்டு
/
பயிர்்க்கடன் செலுத்த இருந்த ரூ.46 ஆயிரம் திருட்டு
ADDED : ஜூன் 21, 2025 12:35 AM
தேவதானப்பட்டி:கெங்குவார்பட்டியில் பயிர் கடன் செலுத்த வந்த விவசாயி முருகனிடம், வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு டூவீலரில் மர்ம நபர் ரூ.46,200ஐ திருடி சென்றார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் 72. கோட்டார்பட்டி அருகே விவசாய நிலம் உள்ளது. கெங்குவார்பட்டி கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வாங்கியுள்ளார். கடைசி நாள் என்பதால் முருகன் டூவீலரில் வத்தலக்குண்டிலிருந்து கெங்குவார்பட்டிக்கு வந்தார். டூவீலர் கவரில் ரூ.46,500 வைத்திருந்தார். அதில் ரூ.300 எடுத்து கெங்குவார்பட்டியில் நகல் எடுத்து விட்டு, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பட்டா, சிட்டா அடங்கல் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றார்.
அப்போது டூவீலர் கவரில் வைத்திருந்த ரூ.46,200 காணவில்லை. நீலகலரில் சட்டை அணிந்திருந்தவர் தன்னை பின்தொடர்ந்ததாக போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் அந்தப் பகுதியில் சிசிடிவி., கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.