/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் சலானி தங்கம், வைர நகை கண்காட்சி ஜன., 28 வரை நடக்கிறது
/
கம்பத்தில் சலானி தங்கம், வைர நகை கண்காட்சி ஜன., 28 வரை நடக்கிறது
கம்பத்தில் சலானி தங்கம், வைர நகை கண்காட்சி ஜன., 28 வரை நடக்கிறது
கம்பத்தில் சலானி தங்கம், வைர நகை கண்காட்சி ஜன., 28 வரை நடக்கிறது
ADDED : ஜன 27, 2024 04:40 AM

கம்பம், : சலானி தங்க நகை கடையின் மாபெரும் தங்கம் மற்றும் வைர நகை கண்காட்சி நேற்று கம்பத்தில் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக் கண்காட்சியில் தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருள்களின் நவீன டிசைன்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை, மதுரையில் தங்கம் , வைர நகை விற்பனையில் முன்னிலை வகிக்கும் சலானி தங்க நகை கடை சார்பில் கம்பத்தில் மூன்று நாட்கள்(ஜன. 26 முதல் 28 வரை) தங்கம், வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது.
இங்குள்ள லெமூரியன் ஓட்டலில் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை முக்குலத்தோர் சங்க தலைவர் ஒ.ஆர். குமரேசன், ஆர்.ஆர். இன்டர்நேசனல் பள்ளி தலைவர் ஆர். ராஜாங்கம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றினர். சலானி நிர்வாகம் சார்பில் கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப் படுத்தினார்கள்.
தங்க நகைகளில் டெம்பிள் கலெக்சன்ஸ், இத்தாலியன் கலெக்சன்ஸ், ஆன்டிக், ஜடா , ஆன்டிக் தங்க மாலைகள், செயின்கள், கண்கவர் வளையல்கள், மோதிரங்கள் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதே போல வைர நகைகளும் அதிநவீன டிசைன்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.
வெள்ளி குத்து விளக்குகள், தட்டு, டம்ளர் உள்ளிட்ட கலைநயமிக்க வெள்ளிப் பொருள்களும் இடம் பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் கண்காட்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆர்.ஆர். இன்டர்நேசனல் பள்ளி துணை தலைவர் ஆர்.அசோக் குமார், பொருளாளர் ஜெகதீஷ், ஆர்த்தி பேக்கரி உரிமையாளர் கார்த்தி, புதுப்பட்டி கயிறு மில் அருண், ஏலக்காய் விவசாயி விஷ்ணு, ஆர்.ஆர். பள்ளி இயக்குநர்கள் வசந்தி, கிருத்திகா, ஆதிசுஞ்சனகிரி கல்லூரி வைஷ்ணவி, சிவசங்கரி, கீதா, கல்பனா, நிரந்தரி, பிரியா உள்ளிட்ட திரளான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சலானி தங்க நகை கடை நிர்வாகம் செய்திருந்தது.

