/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு நடவடிக்கை இடுக்கி எஸ்.பி. தகவல்

ADDED : ஜன 10, 2024 12:44 AM
மூணாறு : வண்டிபெரியாறு அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தெரிவித்தார்.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சுரக்குளம் எஸ்டேட்டில் 2021 ஜூன் 30ல் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூனை 24, கட்டப்பனை அதி விரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்து டிச.14ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் பதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தாத்தா ஆகியோரை ஜன.6ல் அர்ஜூன் உறவினர் பால்ராஜ் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆகவே பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தெரிவித்தார். தவிர சிறுமியின் வீடு, சுற்று பகுதிகளில் போலீசார் பகல், இரவு கண்காணிப்பில் ஈடுபடுவர்.
குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் அப்பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். அது தொடர்பாக வண்டிபெரியாறு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. சிறுமியின் பெற்றோர் உள்பட குடும்பத்தினருக்கு முழு நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவல் உண்மைக்கு புறம்பானது, என்றார்.