/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு: கூடலூரில் -நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ADDED : ஜன 17, 2024 01:00 AM
கூடலுார், : கூடலுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பத்மாவதி தலைமையில் நடந்தது. கமிஷனர் காஞ்சனா, பொறியாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். வார்டுகளில் கொசு மருந்து தெளிக்க வேண்டும், தெருக்களில் தரமான பிளீச்சிங் பவுடர் உபயோகிக்க வேண்டும், வளர்ச்சிப் பணிகளை எடுத்த ஒப்பந்ததாரர்கள் உடனடியாக வேலை செய்ய தவறும் பட்சத்தில் அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர்.
நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முல்லைப் பெரியாற்றில் கலப்பதால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இடம் தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மாற்று இடமான கீழக்கூடலுார் பாரவந்தான் அருகே 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமுளியில் ஐயப்ப பக்தர்களுக்காக அடிப்படை வசதி, ரேஷன் கடை கட்டுதல் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளர் விவேக் உட்பட நகராட்சி பணியாளர்கள்பங்கேற்றனர்.