ADDED : செப் 14, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் காமராஜரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு 123 குழந்தையில்லா தம்பதியினருக்கு இலவச குழந்தையின்மை சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது.
முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. தம்பதிகள் நேரில் பங்கேற்று பயனடையலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம் ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.இம்முகாமில் ரத்த சர்க்கரை அளவு, தைராய்டு, ஸ்கேன் பரிசோதனை, விந்தணு பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது. முகாம் பற்றிய விபரங்களுக்கு மருத்துவமனை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

