/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மா மரங்களில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
/
மா மரங்களில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
ADDED : ஜன 17, 2024 01:02 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் மா மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி, காய்ப்பை அதிகரிக்க மரங்களில் மருந்து தெளிப்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, வேலப்பர்கோயில், கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, வைகை அணை உட்பட பல பகுதிகளில் மா மரங்கள் பல ஏக்கரில் உள்ளன. மா மரங்களில் தற்போது பூக்கள் எடுப்பதற்கான சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மரங்களில் பூச்சி தாக்குதலை தடுக்க மருந்து தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் காசா, கல்லாமை, செந்தூரம், பங்கனப்பள்ளி, சப்போட்டா, இமாம் பசந்த வகை மரங்கள் அதிகம் உள்ளன. கடந்த சில வாரங்களில் நிலவிய சீதோசணத்தால் மரங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மழைக்கான சூழல் மாறி உள்ளது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும், காய்ப்புத்தன்மை அதிகரிக்கவும் தேவையான மருந்துகள் பவர் தெளிப்பான் மூலம் மரங்களில் தெளிக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் மரங்களில் காய்கள் பறிக்க முடியும். இவ்வாறு தெரிவித்தனர்.

