/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில கூடைப்பந்து போட்டி பெரியகுளம் - கரூர் அணி மோதல்
/
மாநில கூடைப்பந்து போட்டி பெரியகுளம் - கரூர் அணி மோதல்
மாநில கூடைப்பந்து போட்டி பெரியகுளம் - கரூர் அணி மோதல்
மாநில கூடைப்பந்து போட்டி பெரியகுளம் - கரூர் அணி மோதல்
ADDED : ஜன 27, 2024 04:46 AM

போடி : போடி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில கூடைப்பந்து போட்டி சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் போட்டியை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக பயிற்சி கமிட்டி சேர்மன் சுப்புராஜ், கார்ட்மம் பிளாண்டர்ஸ் தரணிதரன், சேதுராமன், பழனிசெட்டிபட்டி வெங்கடேசன், பாலமுத்தழகு பேங்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெகநாத் மிஸ்ரா துவக்கி வைத்தனர்.
போட்டியில் கரூர் டெக்ஸ் சிட்டி அணி 79:71 என்ற புள்ளி கணக்கில் பெரியகுளம் பாப்ஸ் ஸ்போர்ட்ஸ் அணியை வென்றது. வத்தலகுண்டு யெங் ஸ்டார் அணி 74:38 புள்ளி கணக்கில் விருதுநகர் விண் ரோஸ் அணியை வென்றது.
கோவை பி.எஸ்.ஜி., அணி 65:57 புள்ளி கணக்கில் தேனி எல்.எஸ்.மில்., அணியை வென்றது.
சென்னை எஸ்.டி.ஏ.டி, அணி 62:36 புள்ளி கணக்கில் கம்பம் பென்னிகுவிக் அணியை வென்றது.
சென்னை வி.கே., ஜெயராம் அணி 74:60 புள்ளி கணக்கில் கரூர் டெக்ஸ் சிட்டி அணியை வென்றது.பெண்களுக்கான போட்டியில் சென்னை ரேசிங் ஸ்டார் அணி 71:47 புள்ளி கணக்கில் சென்னை ஜே.பி.ஆர்., கல்லூரி அணியை வென்றது. ஏற்பாடுகளை போடி கூடைப்பந்தாட்ட கழக தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் சந்தோஷ்குமார், பொருளாளர் சீனிவாசன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

