/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில அளவிலான வாலிபால் போட்டி: போலீஸ் அணி, பொள்ளாச்சி அணி முன்னிலை
/
மாநில அளவிலான வாலிபால் போட்டி: போலீஸ் அணி, பொள்ளாச்சி அணி முன்னிலை
மாநில அளவிலான வாலிபால் போட்டி: போலீஸ் அணி, பொள்ளாச்சி அணி முன்னிலை
மாநில அளவிலான வாலிபால் போட்டி: போலீஸ் அணி, பொள்ளாச்சி அணி முன்னிலை
ADDED : ஜன 17, 2024 01:03 AM

பெரியகுளம் : மாநில வாலிபால் போட்டியில் முதல் பரிசு, கோப்பையை பெறுவதற்கு, போலீஸ் அணியும், பொள்ளாச்சி அணியும் முன்னிலையில் உள்ளது.
பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மாநில வாலிபால் போட்டி பகல் இரவாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் போட்டியை ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் சின்னராஜா, பேரூராட்சி தலைவர் நடேசன் முன்னிலை வகித்தனர். சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், லயோலா கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, புனித வளனார் பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணி ஆகிய 6 அணிகள் விளையாடுகிறது.
லீக் சுற்று போட்டிகளாக நடக்கிறது. முதல் போட்டியில் சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணியும், லயோலா கல்லூரி அணியும் மோதியது. இதில் சரஸ்வதி அணி 2:0 செட் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இரண்டாம் போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணியும், வைஷ்ணவா கல்லூரி அணியும் மோடியது போலீஸ் அணி 2:0 செக் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புனித வளனார் அணியும் மோதியது. இதில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2:0 செட் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று காலையில் நடந்த 4வது போட்டியில் பொள்ளாச்சி அணியும், வைஷ்ணவா அணியும் மோதியது.
இதில் பொள்ளாச்சி அணி 2:0 செட் கணக்கில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. போலீஸ் அணியும், புனித வளனார் அணியும் மோதியது. போலீஸ் அணி 2:0 செட் கணக்கில் வெற்றி பெற்று தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.
லயோலா கல்லூரியும், விளையாட்டு மேம்பாட்டு அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் லயோலா அணி 2:1 செட் கணக்கில் வெற்றி பெற்றது.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு டாக்டர் செல்வராஜ் வழங்கும் சீதையம்மாள் நினைவு சுழற் கோப்பை, சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பரசூரியவேலு வழங்கும் ரூ.25,005 உட்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை இளைஞர் விளையாட்டு கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

