/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி --- எருமேலி ரயில் பாதை ஆய்வு பணிக்கு டெண்டர்
/
தேனி --- எருமேலி ரயில் பாதை ஆய்வு பணிக்கு டெண்டர்
தேனி --- எருமேலி ரயில் பாதை ஆய்வு பணிக்கு டெண்டர்
தேனி --- எருமேலி ரயில் பாதை ஆய்வு பணிக்கு டெண்டர்
ADDED : ஜூன் 01, 2025 12:57 AM
தேனி: தேனியில் இருந்து எருமேலிக்கு அகல ரயில் பாதை அமைக்க ஆய்வு பணிக்கான டெண்டரை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
இவர்கள் ரோடு வழியாக வாகனங்களில் அதிகம் பயணிக்கின்றனர். ரயில் மூலம் சென்று தரிசனம் செய்ய விரும்பினால் 90 கி.மீ., துாரத்தில் உள்ள கேரளா செங்கனுார் ரயில் நிலையம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கலில் இருந்து தேனி வழியாக சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது. சில வாரங்களுக்கு முன் திண்டுக்கல் --சபரிமலை அகல ரயில் பாதை ஆய்வு பணிக்காக ரூ. 46 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தது.
இதற்கிடையே தேனியில் இருந்து எருமேலிக்கு ரயில் பாதை அமைக்க இடத்தேர்வுக்கான ஆய்விற்கு டெண்டர் நடக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் தேனி- -- எருமேலி இடையிலான 115 கி.மீ., துாரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க ஆய்வு பணிக்காக ரூ.2.90 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் தேனி- -லோயர்கேம்ப், லோயர்கேம்ப்- -எருமேலி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது.
டெண்டர் எடுத்த நாளில் இருந்து 15 மாதங்களில் ஆய்வு பணிகளை முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தமிழகத்தில் புதிய ரயில் பாதை தொடர்பான சர்வே பணிகள், இரண்டாவது ரயில் பாதைக்கான ஆய்வுப்பணிகள் உள்ளிட்ட 13 பணிகளுக்கும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.