/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வழிபாடு 'அரோகரா' கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம்
/
தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வழிபாடு 'அரோகரா' கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம்
தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வழிபாடு 'அரோகரா' கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம்
தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வழிபாடு 'அரோகரா' கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 26, 2024 06:17 AM

தேனி: மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முருகன் கோயில்களில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி வீரப்ப அய்யனார் மலைக்கோயில் அருகே பனசலாறு அருள்முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், ஆராதனை நடந்தன. தைப்பூச விழாக்குழு, சிவச்சாரியார்கள், பக்தர்கள் இணைந்து அருட்பா ஆராதனை, அகறவற் பாராயணம் செய்தனர்.
அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி தலைமையில் செயலாளர் தாமோதரன் முன்னிலையில் தேனி  நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம்,  கவுன்சிலர் பாலமுருகன், ரத்தினம் குழும நிர்வாக இயக்குனர் சுந்தரவடிவேல் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை தைப்பூச அன்னதானக்குழு தலைவர் பாலகுரு, துணைத் தலைவர் முருகன், செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் ராஜூ, ஆலோசகர் முனியாண்டிபிள்ளை, நிர்வாகிகள் வீரமணி செய்திருந்தனர். திராளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
வீரப்ப அய்யனார் கோயில் மூலவர், நந்தி, கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேனி என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில் மூலவர் கந்த பெருமாள், உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தன.  தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரகார தெய்வமாக வீற்றிருக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டன. பெரியகுளம் ரோடு தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள வேல்முருகன் கோயிலில் மூலவருக்கு காலையில்   சந்தனகாப்பு, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.  அன்னதானம் வழங்கப்பட்டது.
கம்பம்:  -ராயப்பன்பட்டி மலை அடிவாரத்தில்  அமைந்துள்ளது சண்முகநாதன் கோயிலில்  அதிகாலை முதல்  பத்தர்கள் அரோகரா கோஷத்துடன் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சர்வ அலங்காரத்தில் முருகள் எழுந்தருளினார். முன்னதாக  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால் தயிர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் என பல வாசனை  பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் ஆயிரக்கணக்கில் பத்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பணி கமிட்டி  கம்பம் ஜெயப்பாண்டியன், சரவணன்,, யுவராசா, உதயகுமார், திருப்பூர் வெங்கடேசன்,  சிவனடியார் முருகன் சுவாமிகள், அர்ச்சகர் கணபதி  உள்ளிட்டோர்  செய்திருந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி ஊர்களுக்கு சிறப்பு பஸ் விடப்பட்டது.
கம்பம் வேலப்பர் கோயிலில் தைப்பூச விழாவிழாவில் பக்தர்கள் வழங்கிய பால் அண்டாக்கங்களில் நிரப்பப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தரிசிக்க திரளாக பக்தர்கள் குவிந்தனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயில்களிலும் தைப்பூச சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
போடி:- சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வாணையுடன் தங்க கவச அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன், செயல் அலுவலர் ஹரிஷ் குமார் முன்னிலையில் நடந்தது.
போடி தேனி மெயின் ரோட்டில் உள்ள தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மூலிகை கலந்த தீர்த்த சுனைகளில் பக்தர்கள் நீராடி  முருகனின் தரிசனம் பெற்றனர்.  அருகே உள்ள சித்திரபுத்திரனார் கோயிலில் சித்ரபுத்திரனாருக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது.
கூடலுார்:-  சுந்தரவேலவர் கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு பால் அபிஷேகம்,  ஆராதனை நடந்தது. சுந்தரவேலவர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர்.  பொங்கல், பழச்சாறு பிரசாதம் வழங்கப்பட்டது. லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் பக்தர்கள் சேவாக் குழு, மாதவ சேவா மையம் சார்பில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்து வழிபட்டனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இக்கோயிலுக்கு உற்சவர் முருகன் வெண்கல சிலை காணிக்கையாக வழங்கப்பட்டது. தர்மஜாக்ரன் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் தெய்வம், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முரளி, ராமர், பாபு, ராஜபாண்டி, பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, செயலாளர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உற்சவர் முருகன் சிலையை கூடலுாரில் இருந்து தேரில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழி விடும் முருகன் கோயிலுக்கு வழங்கினர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் தைப்பூசம் விழா கோலாகலமாக நடந்தது. மூலவர் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், உற்ஸவர் தாமரைப்பூ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். காலை 6 மணி முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து  பாலமுத்து குமார தண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அருகேயுள்ள சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

