/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி
/
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி
சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : பிப் 06, 2024 12:29 AM
கம்பம் : சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அவதிப்படும் சூழல் எழுந்துள்ளது.
சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் தினமும் திரளாக வருகின்றனர். மேகமலை பகுதியிலிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக தண்ணீர் வந்து அருவியில் கொட்டும். கடந்த பல மாதங்களாக தொடர்ந்து அருவியில் தண்ணீர் கொட்டியது.
சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து குளித்து சென்றனர். பொதுவாக கோடை காலங்களில் அருவி வற்றி விடும்.
தற்போது கோடை காலம் துவங்கி உள்ளது. ஆனால் இப்போதே அருவியில் தண்ணீர் விழுவது குறைந்து விட்டது.
ஆனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.
அருவியில் தண்ணீர் விழுவது குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதில் சிரமப்பட்டு வருகின்றனர்.