/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியை கடித்து குதறிய சிங்கவால் குரங்கு சிக்கியது
/
சிறுமியை கடித்து குதறிய சிங்கவால் குரங்கு சிக்கியது
சிறுமியை கடித்து குதறிய சிங்கவால் குரங்கு சிக்கியது
சிறுமியை கடித்து குதறிய சிங்கவால் குரங்கு சிக்கியது
ADDED : ஜன 11, 2024 04:14 AM

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் செருதோணி அருகே கஞ்சிகுழியில் மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய சிங்கவால் குரங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
கஞ்சிகுழியில் வசிக்கும் ஜிஜூபாலின் மூன்று வயது மகள் நித்யா ஜன. 1 ல் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிங்கவால் குரங்கு கடித்து குதறியது. பலத்த காயமடைந்த சிறுமி இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அச்சமடைந்த மக்கள் குரங்கை பிடிக்ககோரிக்கை விடுத்தனர்.
வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்தனர். அக்கூண்டில் சிங்கவால் குரங்கு நேற்று முன்தினம் மாலை சிக்கியது. உடல்நிலை பரிசோதனைக்குப்பின் பிறகு பாலக்காடு மாவட்டத்தில் பரம்பிகுளம் வாழச்சால் வனப்பகுதியில் அதனை விட்டனர்.
அப்பகுதியின் காலநிலை சிங்கவால் குரங்குகள் வாழ்வதற்கு ஏற்றது என வனத்துறை அதிகாரி சந்தோஷ் கூறினார்.

