/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்ச்சலை கண்டறியும் பணி தீவிரம்! ரத்த மாதிரிகள் சேகரிக்க உத்தரவு
/
காய்ச்சலை கண்டறியும் பணி தீவிரம்! ரத்த மாதிரிகள் சேகரிக்க உத்தரவு
காய்ச்சலை கண்டறியும் பணி தீவிரம்! ரத்த மாதிரிகள் சேகரிக்க உத்தரவு
காய்ச்சலை கண்டறியும் பணி தீவிரம்! ரத்த மாதிரிகள் சேகரிக்க உத்தரவு
ADDED : ஜன 10, 2024 12:43 AM
மாவட்டத்தில் தேனி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலை மயிலை ஆகிய ஊர்களில் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் குறைந்தது 4 முதல் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. தொடர் மழை காரணமாக கிராமங்களில் ஆங்காங்கே 'டெங்கு' சிக்குன் குனியா காய்ச்சல் காணப்படுகிறது.
மாவட்ட துணை இயக்குநர் குமரகுருபரன் உத்தரவின்பேரில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சந்தேகப்படும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து, டொம்புசேரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட மாவட்ட பொதுச் சுகாதாரத்துறை ஆய்வகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகம் சமீபத்தில் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்தேகப்படும் நபர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரித்து, டொம்புசேரி ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
டெங்கு, சிக்குன்குனியா, எலி காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறியும் வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகள் ஆய்வு செய்து, காய்ச்சலின் தன்மை குறித்து ஆய்வக தொழில்நுட்பர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கிறார். அதை தொடர்ந்து உரிய சிகிச்சையளிக்கப்படுகிறது.
சமீபத்திய தொடர் மழையால் கிராமங்களில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தொடர்ந்து ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யும் பணியில் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் இருந்து தினமும் குறைந்தது 50 ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளனர்.

