/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் மழையின்றி குறைகிறது நீர்மட்டம்
/
முல்லைப் பெரியாறு அணையில் மழையின்றி குறைகிறது நீர்மட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் மழையின்றி குறைகிறது நீர்மட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் மழையின்றி குறைகிறது நீர்மட்டம்
ADDED : ஜன 27, 2024 02:14 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 2023 டிச. 24ல் 141 அடியைஎட்டியது. அதன்பின் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வந்தது. ஜன. 5ல் 136.80 அடியாக இருந்தது. மீண்டும் மழையால் ஜன. 17ல் 139 அடியாக உயர்ந்தது. அதன்பின் மீண்டும் மழை குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 137.50 அடியானது (மொத்த உயரம் 152 அடி). அணைக்குநீர்வரத்து வினாடிக்கு250 கன அடியாகஇருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6496 மில்லியன் கன அடி. நீர் பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை.
கடும் வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது.