/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம் தாலுகாவில் 'ஏ' கிராமங்கள் அதிகம் வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் வாய்ப்பு
/
உத்தமபாளையம் தாலுகாவில் 'ஏ' கிராமங்கள் அதிகம் வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் வாய்ப்பு
உத்தமபாளையம் தாலுகாவில் 'ஏ' கிராமங்கள் அதிகம் வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் வாய்ப்பு
உத்தமபாளையம் தாலுகாவில் 'ஏ' கிராமங்கள் அதிகம் வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் வாய்ப்பு
ADDED : ஜூன் 15, 2025 06:56 AM
கம்பம் : மாவட்டத்தில் வி.ஏ.ஒ,க்கள் பணி புரியும் 'ஏ' கிராமங்கள் உத்தமபாளையம் தாலுகாவில் அதிகம் உள்ளது. இதனால் வி.ஏ.ஓ.,க்கள் நகரங்களில் பணியாற்ற கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.
ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும்  ஒரு வி. ஏ. ஒ. பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வி. ஏ. ஒ.,க்கள்  ஒவ்வொருவரும் 'ஏ' கிராமத்தில் ஒராண்டும், 'பி' கிராமங்களில் 3 ஆண்டும் பணியாற்றி கொள்ளலாம்.
'ஏ' கிராமத்தில் ஒராண்டு பணி நிறைவு செய்தவரை மீண்டும்  'ஏ' கிராமத்தில் பணியமர்த்த கூடாது. அவரை 'பி' கிராமத்திற்கு மாற்றல் செய்ய வேண்டும்.  'பி' கிராமத்தில் வேலை பார்த்தவரை 3 ஆண்டுகளுக்கு பின்  'பி' கிராமத்தில் பணியமர்த்தலாம்.
இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் மட்டுமே  'ஏ' கிராமங்கள் அதிகம் உள்ளன.
உத்தமபாளையத்தில் 22   'ஏ' கிராமங்களும், 13 'பி' கிராமங்களும் உள்ளன. போடி தாலுகாவில் 2  'ஏ'  கிராமங்களும், 12 'பி' கிராமங்களும், பெரியகுளத்தில் 3  'ஏ' கிராமங்கள், 16 'பி' கிராமங்களும், தேனியில் ஒரு  'ஏ' கிராமம், 10 'பி' கிராமங்களும், ஆண்டிபட்டியில் ஒரு  'ஏ' கிராமமும், 24 'பி' கிராமங்களும் உள்ளது.
இதில் உத்தமபாளையம் தாலுகாவில் பணியாற்றும் வி. ஏ. ஒக்கள் அதிர்ஷ்டசாலிகள்.
காரணம்  'ஏ' கிராமத்தில் பணியாற்றி முடித்தவுடன் மீண்டும்  'ஏ' கிராமத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. காரணம் 22  'ஏ' கிராமங்கள் இங்கு உள்ளன. மற்ற தாலுகாக்களில்  'ஏ' கிராமங்கள் ஒன்றிரண்டு இருப்பதால், 'பி' கிராமங்களில் தொடர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
நகராட்சிகள், பேரூராட்சிகள்  'ஏ' கிராமங்களாகவும், ஊராட்சிகள் 'பி' கிராமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

