ADDED : ஜன 27, 2024 04:43 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் திருமலை நாயக்கர் 441வது பிறந்தநாள் விழா நடந்தது.
விழாவில் ஆண்டிபட்டி வட்டார நாயுடு மற்றும் நாயக்கர் மகாஜன சங்கம் வட்டார தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், கௌரவ தலைவர் சுப்புராஜ், ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாப்பம்மாள்புரம் மற்றும் மேலத்தெரு பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலம் சென்று பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன் தலைமையில் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்தனர். எம்.எல்.ஏ., மகாராஜன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர் செயலாளர் சரவணன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் காசிமாயன், ஒன்றிய செயலாளர்கள் தவச்செல்வம், திருமலைநாகராஜ், தொகுதி பொறுப்பாளர் அய்யணன், சண்முகசுந்தராபுரம் ஊராட்சி தலைவர் ரத்தினம், கவுன்சிலர் பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

