ADDED : ஜன 17, 2024 01:06 AM
கம்பம் : தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு இன்று ( ஜன. 17 ) விடுமுறை விடப்பட்டுள்ளது. உழவர் திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.
இன்று ( ஜன. 17 ) உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்கள் ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் உழவர்சந்தைகளுக்கு இதுவரை விடுமுறை வழங்கப்பட்டதில்லை. கடந்தாண்டு முதல் உழவர் திருநாளை உழவர் சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . மாவட்டத்தில் கம்பம், தேனி, போடி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய ஊர்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. தை முதல் நாள் மட்டுமே காய்கறி வரத்து இருக்கும். மாட்டு பொங்கலன்றும், உழவர் திருநாளன்றும் உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து இருக்காது. எனவே விடுமுறை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். கம்பம் உழவர் சந்தையில் தை முதல் நாளில் 38 டன் வரை காய்கறிகள் விற்பனையானது.

