/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாயில் மண் கடத்தலால் வேரோடு சாயும் மரங்கள்
/
கண்மாயில் மண் கடத்தலால் வேரோடு சாயும் மரங்கள்
ADDED : ஜன 26, 2024 06:26 AM
போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி கவுண்டன்குளம் கண்மாயில் மண் கடத்தலோடு மரங்களையும் வெட்டி கடத்துவது அதிகரித்து வருகிறது.
ஐம்பது ஏக்கர் அளவில் கவுண்டன்குளம் கண்மாய் அமைந்துள்ளது.
கண்மாயில் மழைநீர் சேமித்து அப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுகிறது. கண்மாயில் டிராக்டர் மூலம் மண் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இங்கு வளர்ந்துள்ள மரங்களின் அடிப்பாகம் மண் அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாய்கின்றன. இதனை சாதகமாக பயன்படுத்தி ரூ. பல ஆயிரம் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்தி வருவதும் தொடர்கிறது. பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கைஇல்லை.
நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்க கண்மாயில் மண், மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க வருவாய் துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

