/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இறந்த நாய், கோழி கழிவுகளை கொட்டுவதால் நீரில் துர்நாற்றம் குறைதீர் கூட்டத்தில் கிராமத்தினர் மனு
/
வைகை அணையில் இறந்த நாய், கோழி கழிவுகளை கொட்டுவதால் நீரில் துர்நாற்றம் குறைதீர் கூட்டத்தில் கிராமத்தினர் மனு
வைகை அணையில் இறந்த நாய், கோழி கழிவுகளை கொட்டுவதால் நீரில் துர்நாற்றம் குறைதீர் கூட்டத்தில் கிராமத்தினர் மனு
வைகை அணையில் இறந்த நாய், கோழி கழிவுகளை கொட்டுவதால் நீரில் துர்நாற்றம் குறைதீர் கூட்டத்தில் கிராமத்தினர் மனு
ADDED : பிப் 06, 2024 12:34 AM

தேனி : வைகை அணையில் மீன்பிடி குத்தகை எடுத்துள்ளவர்கள் இறந்த நாய்கள், கோழி கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசுபட்டு, துர்நாற்றம் வீசுவதாக நீர்பிடிப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்கள், கோரிக்கைகளை 345 மனுக்களாக வழங்கினர்.
வைகை அணை நீர்பிடிப்பு பகுதி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக கரட்டுப்பட்டி பாண்டியன் வழங்கிய மனுவில், வைகை அணையில் மீன் பிடி ஒப்பந்தம் கடந்தாண்டு தனியாருக்கு வழங்கப்பட்டது.
அவர்கள் மீன் வளர்ச்சியை அதிகரிக்க இறந்த தெருநாய்கள், கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை நீர்பிடிப்பு பகுதிகளில் வீசுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மாசுபட்ட நீரை பயன்படுத்தும் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கின்றன.
தனியார் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிலர் பெண்களை கேலி செய்வதும் தொடர்கிறது. தனியார் மீன்பிடி உரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரினர்.
போடி ஊத்தாம்பாறை விவசாயிகள் சார்பில் ரங்கதுரை வழங்கிய மனுவில், 'ஊத்தாம்பாறையில் விவசாயிகள் காபி, ஏலம், மிளகு, எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறறோம்.
விவசாயம் செய்வதற்கு வனத்துறையினர் நெருக்கடி தருகின்றனர். வன உரிமைச் சட்டப்படி விவசாய நிலங்களுக்கு பட்ட வழங்கி உதவ வேண்டும் என கோரினார்.
போ.மீனாட்சிபுரம் சுருளி என்பவரது மனுவில், மாற்றுத்திறனாளியான நான் தையல் கடையில் பணிபுரிகிறேன்.
தினமும் பணிக்கு சென்றுவர சிரமமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க கூடிய டூவீலர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது.
ஆண்டிப்பட்டி மேலத்தெரு தங்கம், வளர்மதி உள்ளிட்ட பெண்கள் குழுவினர் மனுவில், மகளிர் உரிமைத்தொகை எங்கள் பகுதியில் சிலருக்கு கிடைக்காமல் உள்ளது.
கிடைக்காதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க கோரினர். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.