/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் நிறுத்தம்
/
பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் நிறுத்தம்
பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் நிறுத்தம்
பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் நிறுத்தம்
ADDED : ஜூலை 04, 2025 07:21 AM

கூடலுார்; முல்லைப் பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதிமுறையால் கேரளப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நேற்று மதியம் 12:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கன மழையால் நீர்மட்டம் ஜூன் 28ல் 136 அடியை எட்டியது.
ரூல்கர்வ் விதிமுறைப்படி ஜூன் 30 வரை அணையில் 136 அடி மட்டுமே தேக்க முடியும். நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நீர்மட்டம் மேலும் உயரத் துவங்கியது.
இதனால் 136 அடியை நிலை நிறுத்துவதற்காக ஜூன் 29ல் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களை 30 சென்டிமீட்டர் அளவில் உயர்த்தப்பட்டு வினாடிக்கு 250 கன அடி நீர் வீதம் கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.
ஜூன் 30ல் மேலும் அதிகரிக்கப்பட்டு 363 கன அடி வெளியேற்றப்பட்டது.
நேற்று காலை கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீர் 37 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் மதியம் 12:00 மணிக்கு அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி) தமிழகப் பகுதிக்கு 2154 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6143 மில்லியன் கன அடியாகும். அணைக்கு நீர்வரத்து 1547 கன அடியாக இருந்தது.
ரூல்கர்வ் விதிமுறைப்படி ஜூலை 10 வரை 136.30 அடி வரை தண்ணீர் தேக்கலாம்.