/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுமா! தமிழக, கேரள பொதுமக்கள் வலியுறுத்தல்
/
கம்பமெட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுமா! தமிழக, கேரள பொதுமக்கள் வலியுறுத்தல்
கம்பமெட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுமா! தமிழக, கேரள பொதுமக்கள் வலியுறுத்தல்
கம்பமெட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுமா! தமிழக, கேரள பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2024 05:45 AM

தேனி மாவட்டத்தை கேரளாவும் இணைக்க குமுளி, கம்பமெட்டு மற்றும் போடிமெட்டு பகுதிகள் உள்ளன.
இந்த மூன்று பாதைகள் வழியாக இரு மாநில போக்குவரத்து நடைபெறுகிறது.
போடிமெட்டு மற்றும் குமுளி ரோடுகள் தேசிய நெடுஞ்சாலை கையகப்படுத்தி உள்ளது. கம்பமெட்டு ரோடு மட்டும் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது.
கேரளாவிற்குள் செல்ல குமுளி மற்றும் போடிமெட்டு வழியாக செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் பஸ் வசதிகள் செய்துள்ளது. ஆனால் கம்பமெட்டு ரோட்டில் மட்டும் பஸ் போக்குவரத்து போதியளவில் இல்லை.
நெடுங்கண்டம் மற்றும் கட்டப்பனை நகரங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது.
ஆனால் இந்த ரோட்டின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ' ஜீப் வாகனங்களில் ஏலத் தோட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்கின்றனர். அதே போன்று இடுக்கி மாவட்டத்தில் வசிப்பவர்களும் தினமும் தேனி மாவட்டத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
ஆனால் நெடுங்கண்டம், கட்டப்பனை நகரங்களுக்கு மட்டும் பஸ் வசதி உள்ளது.
கம்பமெட்டில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தவும், கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு அடிக்கடி பஸ்களை இயக்கவும் இரு மாநில பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவிற்குள் பஸ் விட வேண்டும் என்றால் தான், கேரளாவிடம் அனுமதி கேட்க வேண்டும். கம்பமெட்டு வரை என்றால் அனுமதி கேட்க தேவையில்லை.
அரசிற்கு வருவாயும் கிடைக்கும்.
இருமாநில பொதுமக்களுக்கு குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனவே பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், கூடுதல் பஸ்களை இயக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.