/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுமா? மழைநீர் வீணாவதை தடுக்கும் நீர் சேகரிப்பு திட்டம் தேவை

ADDED : ஜன 17, 2024 01:00 AM
கம்பம் பள்ளத்தாக்கில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு பாசன வசதியும், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாராமாகவும் முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தின் தண்ணீர் தேவையை போக்குகிறது. ஆனால் லோயர்கேம்பில் ஆரம்பித்து தேனி வரை ரோட்டிற்கு மேற்கு பகுதி மானாவாரி நிலங்களாகவே உள்ளது.
அந்த பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க 18 ம் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கமான பாசன வசதி பெற இயலவில்லை. ஆண்டில் குறிப்பிட்ட நாட்களே கால்வாயில் தண்ணீர் வழங்கப்படும். எனவே மானாவாரி நிலங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இன்னும் வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது.
லோயர்கேம்பில் துவங்கி தேவாரம் வரையிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இதில் துவரை, நிலக்கடலை, உளுந்து, மொச்சை, தட்டை, சோளம், கம்பு, கொட்டை முந்திரி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மழை கிடைத்தால் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. சமீபத்தில் இப் பகுதியில் வடகிழக்கு பருவமழை பல நாட்கள் பெய்தும் கிடைத்த மழைநீரை சேமிக்க வழியில்லாததால் ஆற்றில் கலந்தது.
எனவே கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு மேற்கு பக்கம் மலையடிவாரங்களில் சிறிய நீர்த் தேக்கங்களை அமைக்க வேண்டும். இதனால் மழை காலங்களில் வெளியேறும் மழைநீர் வீணாகாமல் ஆங்காங்கே தடுக்கப்பட்டு சேமிக்கப்படும். இதன்மூலம் மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும். மேய்ச்சல் கால்நடைகள் மற்றும் வனப்பகுதியிலிருந்து மானாவாரி நிலங்களுக்கு வரும் வனஉயிரினங்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
மலையடிவாரங்களில் இருந்த குளங்கள் ஆக்கிரமிப்பால் இருந்த இடம் தெரியாமல் மாற்றப்பட்டுள்ளது. அவற்றை சர்வே செய்து மீட்கவேண்டும். நீர்வழித்தடங்கள், விளை நிலங்களாக மாற்றப்பட்டதை கையகப்படுத்தி மீண்டும் நீர் வழித் தடமாக மாற்ற வேண்டும்.
வேளாண் பொறியியல் துறையின் தடுப்பணைகள் கட்டுவதை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் சிறிய நீர்த் தேக்கங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாவாரி விவசாயிகள் கோருகின்றனர்.