/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் வினியோகம் இல்லை காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
/
குடிநீர் வினியோகம் இல்லை காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் வினியோகம் இல்லை காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் வினியோகம் இல்லை காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
ADDED : ஜூன் 12, 2025 02:50 AM
தேனி: அரண்மனைப்புதுார் ஊராட்சி 1, 3, 5, 10 ஆகிய வார்டுகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதிக்கு சத்திரப்பட்டி முல்லைப் பெரியாற்றின் உறைகிணறில் இருந்து குடிநீர் பம்பிங் செய்து வினியோகிக்கப்படுகிறது.
இங்குள்ள 2 மின்மோட்டார்கள் ஏழு நாட்களாக பழுதடைந்ததால் குடிநீர் வினியோகம்தடைபட்டது.
இதனால் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் நேற்று மாலை காலி குடங்களுடன் பெண்கள், ஆண்கள் அரண்மனைப்புதுார் கண்டமனுார் மெயின் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு துணை பி.டி.ஓ., பானுமதி, பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள், முன்னாள் ஊராட்சித் தலைவர் பிச்சை, ஊராட்சிச் செயலர் பாண்டி ஆகியோர் வந்து சமாதனம் செய்து, இன்று காலை 11:30 மணிக்குள் குடிநீர் வினியோகிக்கப்படும் என உறுதி அளித்தவுடன், மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் இப்பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.