ADDED : ஜன 26, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வடபுதுப்பட்டி சவுடம்மன் கோயில் தெரு விக்னேஷ் 25. மின்னியல் மற்றும் மின்னணுவியல் டிப்ளமோ முடித்துள்ளார்.
தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தனியார் நவதானிய மில்லில் மிஷினரி ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். ஜன., 24 மாலை 5:45 மணிக்கு, அவல் தயாரிக்கும் மிஷினில் அலாரம் சுவிட்ச்சை ஆப் செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்துஅல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

