ADDED : ஜூன் 12, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அன்னஞ்சி கிழக்குத்தெருவை சேர்ந்த தொழிலாளி சக்திவேல் 31. தேனி புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்ற இவர் இயற்கை உபாதைக்காக கரட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர், சக்திவேலை வழிமறித்து அவரிடம்
இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை பறித்தனர்.
பின் ஒரு நபர் சக்திவேல் வைத்திருந்த ரூ.2,500 மதிப்பள்ள சிமென்ட் சிலாப் கட்டிங் மெஷினை எடுத்து கொண்டு, கைளால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தினர். புகாரில் தேனி போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.