ADDED : ஜூலை 05, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம், ஒக்கரைபட்டியை சேர்ந்தவர் பாரதிகண்ணன் 24, அரண்மனைபுதூரில் உள்ள தனது சகோதரியை பார்ப்பதற்காக நண்பரின் டூவீலரை இரவல் வாங்கிக் கொண்டு சென்று திரும்பி உள்ளார்.
எம்.சுப்பலாபுரம் விலக்கு அருகே கட்டுப்பாடு இழந்த டூவீலரில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பாரதிக்கண்ணனின் தாயார் பசுபதி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.