ADDED : ஜூலை 28, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:மது போதையில் மனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் 48. கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி 44. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். கணேசன் எப்போதும் குடிபோதையில் இருந்ததால் மனைவி குழந்தைகளுடன் மாறாந்தையில் உள்ள தங்கை வீட்டின் அருகே வசித்து வந்தார். அங்கும் சென்று கணேசன் தகராறு செய்தார். நேற்று காலையில் அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துலட்சுமியின் தலையில் சிலிண்டரை தூக்கி போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கணேசனை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.