/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
/
நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
ADDED : ஜன 17, 2024 12:12 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியாயினர். ஒரு விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் முத்துகிருஷ்ணன் 5. தாத்தா சுடலைகண்ணுவின் கவனிப்பில் இருந்து வந்தார். நேற்று காலை சுடலை கண்ணு ஆடு மேய்க்கச் சென்றார். அங்குள்ள குளம் அருகில் விளையாடிய முத்துகிருஷ்ணன் அதில் மூழ்கி இறந்தார். விஜயநாராயணம் போலீசார் விசாரித்தனர்.
l உவரியை சேர்ந்த சாமி மகன் மணிகண்டன் 16. உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலுக்கு உறவினருடன் சென்றிருந்தார். கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தில் குளித்த போது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானார். போலீசார் உடலை மீட்டனர்.
l கூடங்குளம் அருகே கீழவிஜயாபதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தில்லை கார்த்திக் 15. ராதாபுரம் அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர். நேற்று மாலையில் விஸ்வாமித்திரர் கோயில் முன்னுள்ள தெப்பக்குளத்தில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார். கூடங்குளம் போலீசார் விசாரித்தனர்.
விவசாயி பலி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் கீழுரை சேர்ந்தவர் விவசாயி கணேசன் 37. மாடுகளுக்கு புல் அறுக்க சென்றிருந்தார். ராஜதுரை என்பவரின் வயலில் அறுந்து கிடந்த மின்ஒயரை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். சிவகிரி போலீசார் விசாரித்தனர்.

